சேலம், பிப். 11- சேலம் சிறை தியாகிகள் 75 ஆம் ஆண்டு நினைவு தின கொடியேற்று விழா சேலத்தில் நடைபெற்றது. உழைப்பவனுக்கு உரிமை, உழுபவனுக்கு நிலம் என்கிற முழக் கத்தோடு போராடிய பொதுவு டமைப்போராளிகளை, சேலம் சிறையில் குருவிகளைப்போல் சுட்டு கொன்ற கொடிய தினம் பிப்.11. அதிகாரத்தின் கொடுங்கரங் களில் சிக்கிக்கொண்டிருக்கும் உழைப்பாளி மக்களுக்கு விடி யல் மார்க்சியமே என்பதை உல கிற்கு உணர்த்த, ஒவ்வொரு ஆண் டும் சேலம் சிறைத்தியாகிகளின் நினைவு தினம் அனுசரிக்கப்படு கிறது. இதன்ஒருபகுதியாக சேலம் சிறைத்தியாகிகளின் 75 ஆம் ஆண்டு நினைவுதினம், செவ்வா யன்று சேலம் சிறைத் தியாகிகள் நினைவகத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழு அலுவலக செயலா ளர் பி.சந்திரன் தலைமையில் நடை பெற்றது. இதில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்து கண்ணன் காரல் மார்க்ஸ் சிலைக்கு மாலை அணிவித்தும், மாநில செயற்குழு உறுப்பினர் என். பாண்டி செங்கொடியை ஏற்றி வைத்து சிறை தியாகிகள் நினைவு தின உரையாற்றினார். இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் முன் னணி ஊழியர்கள் பங்கேற்றனர். இதேபோன்று, சேலம் மத்திய சிறை முன்பு சிபிஎம் வடக்கு மாநக ரக் குழு சார்பில் சேலம் சிறை தியாகி கள் நினைவு கொடியேற்று விழா நடைபெற்றது. இதில், வடக்கு மாந கரச் செயலாளர் என். பிரவீன் குமார், கிழக்கு மாநகரச் செயலாளர் கே.பச்ச முத்து, மேற்கு மாநகர செயலா ளர் பி.கணேசன், மேட்டூர் கொளத் தூர் ஒன்றியக் குழு செயலாளர் எஸ். வசந்தி, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பவித் ரன், மூத்த தோழர்கள் ஆர்.வேங்கட பதி, ஜி. சுல்தான் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். இதேபோல, சேலம் மேற்கு மாநகர் அரியாக் கவுண்டம்பட்டியில் சக்கரை புளிய மரம் அருகில் சேலம் சிறைத்தியாகி கள் நினைவாக கொடியேற்று விழா நடைபெற்றது.