தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் தேர்தல் செலவினங்கள் தொடர்பாக அரசியல் கட்சி வேட்பா ளர்கள் மற்றும் முகவர்களுக்கான பயிற்சி வகுப்பு, கோவை மக்களவை தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் வினோத் ஆர்.ராவ், செலவினப் பார்வையாளர் கீது படோலியா ஆகியோர் தலைமை யில் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்திகுமார் பாடி உட்பட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.