நாமக்கல், செப்.20- நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ச்சியாக ஆங்காங்கே மாலை நேரத்தில் மழை பெய்து வருவதால், சாலையோர சிறு வியாபாரிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். பருவ மழைக்காலம் துவங்கி உள்ள தால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவ தினால் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் அரசி யல் கட்சியினர் கூட தங்களுடைய பிரச்சார பயண தேதிகளை மாற்றம் செய்து வருகின்ற னர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும், கடந்த ஒரு வார காலமாக தொடர்ச்சியாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை நேரத் தில் அதிக அளவு பெய்து வருகிறது. இதனால் வாரச்சந்தை வியாபாரிகள் மற்றும் தினசரி மாலை நேரங்களில் மட்டும் கடை அமைக்கும் வியாபாரிகள் பாதிப்புக்குள்ளாகி வரு கின்றனர். இதுகுறித்து பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் சாலையோரம் தள்ளுவண்டி கடை வைத்திருக்கும் முருகே சன் என்பவர் கூறுகையில், கடந்த ஒரு வாரத் திற்கு மேலாகவே வழக்கமான சீதோஷன நிலை இல்லாமல் அடிக்கடி மழை பெய்து வருகிறது. காலை முதல் மதியம் வரை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மாலை 3 மணிக்கு பிறகு பலத்த காற்றுடன் அதிகளவு மழை பெய்கிறது. இதன் காரண மாக நகரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விடுகிறது. இதனால் சாலையோர வியாபாரிகள் டிபன் கடை, சில்லி கடைகள், தள்ளுவண்டி வாகனங்கள் மூலமாக பிழைப்பு நடத்தும் சிறு வியாபாரிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாலை 6 மணிக்கு வியாபா ரத்தை துவக்க வேண்டுமெனில் மதியம் 2 மணியிலிருந்து வியாபாரத்திற்கு தேவை யான உணவுப் பொருட்களை தயார் செய்ய வேண்டும். ஆனால், அந்த நேரத்திலேயே சரியாக மழை பெய்து விடுவதால் தொடர்ச்சி யாக உணவு பொருட்களை தயார் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. அப்படியே தயார் செய்தாலும் மிகவும் தாமதமாக கடைக்கு வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் வியாபாரமும் பாதிக்கப்பட்டு தயார் செய்து வந்த உணவுப் பொருட்களும் வீணா கிறது. அதேபோல வாராந்திர காய்கறி சந்தை பள்ளிபாளையத்தில் பல்வேறு இடங்களில் கூடுகிறது. மாலை நேரத்தில் தான் அதிக அளவு வாடிக்கையாளர்கள் கடைக்கு வரு வார்கள். ஆனால், அப்போதே மழை கொட்டி தீர்ப் பதால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து, கொண்டு வந்த காய்கறி உள்ளிட்ட பொருட்களும் மழையில் நனைந்து சேதம் அடைகிறது. தற்போது பருவ மழை காலம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற இன்னல்களை சந் தித்து வந்தாலும், ஆயுத பூஜை, தீபாவளி போன்ற விசேஷ நாட்கள் நெருங்கி வரும் நிலையில், இது போன்ற மழையின் காரண மாக வியாபார பாதிப்பு ஏற்பட்டு வருவது கவலையையும் பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார்.