districts

குதிரைப் பந்தய மைதானத்தை மீட்ட வருவாய்த்துறை

உதகை, ஜூலை 6- உதகை வருவாய்த்துறையினர் குதிரைப் பந்தய மைதானத்தை கையகப்படுத்தியதை மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள் ளது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் சனி யன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளதாவது, சென்னை உயர்நீதிமன்றம் உத்தர வின்படி உதகை வருவாய் துறையி னர் உதகை குதிரை பந்தய மைதா னத்தை 05.07 2023 அன்று சீல் வைத்து கையகப்படுத்தியது வர வேற்கத்தக்கது. மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வா கம் கடந்த 2001 முதல் 2023 ஆம்  ஆண்டு வரை நிலுவை வைத்துள்ள  குத்தகை தொகை பாக்கி ரூபாய்  822 கோடியும் மற்றும் நடப்பாண்டு  வரை கணக்கிட்டால் ரூபாய் 900  கோடி வட்டியுடன் வசூலிப்பதற் கான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். 52.34 ஏக்கர்  பரப்பளவு கொண்ட குதிரை பந்தய  மைதானத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதை தோட்டக்கலைத் துறை விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். சுற் றுலாப் பயணிகளின் பயன்பாட் டிற்கு கொண்டு வர வேண்டும்  என மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில்  அரசையும் மாவட்ட நிர்வாகத்தை யும் கேட்டுக்கொள்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டங்களின் விளை வாக 54 ஏக்கர் பரப்பளவில் கடந்த  2018 ஆம் ஆண்டு கையகப்ப டுத்திய நிலத்தில் விரைந்து பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணி கள் பயன்பெறும் வகையில் பார்க் கிங் தளத்திற்கான பணிகளை தொடங்க வேண்டும் என வலியு றுத்துகிறோம். மேலும் சுற்றுலாப்  பயணிகளின் வசதிக்காக சிறிய கடைகள் மற்றும் உணவகங்கள் அமைக்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். இளைஞர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர் களை ஊக்குவிக்கும் வகையில்  நவீன வசதியுடன் கூடிய விளை யாட்டு அரங்கம் அமைக்க வேண் டும் என தமிழக அரசை வலியுறுத்தி கிறோம் என தெரிவிக்கப்பட்டுள் ளது.