தருமபுரி, ஆக.29- நல்லம்பள்ளி அருகே உள்ள அரசுப்பள்ளிக்கு சுற் றுச்சுவர் அமைத்துத்தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட் பட்ட அவ்வைநகரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 170க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பழமையான இப்பள்ளியில், அப்பகுதியைச் சேர்ந்த குடும்பத்தில் உள்ள மாணவர்கள் படித்து வருகின்றனர். இப் பள்ளியின் சுற்றுச்சுவர் பாதி பழுதடைந்து உடைந்துள் ளது. சுவர் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சம் பெற்றோர்களிடையே உள்ளது. பள்ளி நேரங்களில் விழுந்தால், மாணவர்களின் உயிர் கேள்விக்குறியாகி விடும். மேலும், தருமபுரி நகரத்தினுள் ஒன்றாக இருக் கும் இப்பள்ளிக்குள், இரவு நேரங்களில் சமூக விரோதி கள் நுழைந்து விடுகின்றனர். மது குடிப்பது, அங்கேயே விடிய விடிய தூங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, உடனடியாக பள்ளிக்கு சுற்றுச் சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.