உதகை, ஆக.8- நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்குப் பாடநூல்கள் வழங்கப்படாததைக் கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு வெள்ளியன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கூடலூர் வட்டாரத்தில் உள்ள பல பள்ளிகளில் முதல் பருவத்துக் கான இலவசப் பாடநூல்கள் இன் னும் வழங்கப்படவில்லை. இத னால், ஏராளமான மாணவர்கள் பாடநூல் இல்லாமல் சிரமப்படு கின்றனர். மேலும், நெலாக் கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பென் னையில் பழங்குடியின மாணவர் கள் படித்துவந்த ஒரு பள்ளி, கடந்த ஏப்ரல் 30-ம் தேதி மூடப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்ற அந்தப் பள்ளியை மீண்டும் உடனடியாகத் திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் கூடலூர் வட்டாரத் தலைவர் பர மேஸ்வரன் தலைமை தாங்கினார். இதில், வட்டாரச் செயலாளர் சஜி, ஓய்வு பெற்ற பள்ளிக் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி பத்மநாதன், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க நிர்வாகி தங்கராஜ், அரசு ஊழியர் சங்க நிர் வாகி போஜன், ஜெயகாந்தன், தமிழ் நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் மாவட்ட இணைச் செயலா ளர் கருணாநிதி, மாவட்டத் தலை வர் செல்வி உள்ளிட்டோர் உரை யாற்றினர். முடிவில், வைரன் நன்றி யுரை கூறினார். இந்த ஆர்ப்பாட் டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.