districts

img

கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், அக்.6- தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும்.கட்டு மானத் தொழிலாளர்களுக்கு பென்  சன் தொகையை மாதா மாதம் முறை  யாக வழங்க வேண்டும். பென் சனை ரூ.3 ஆயிரத்திற்கு உயர்த்தி வழங்க வேண்டும். வீடு கட்டும் திட்  டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்   என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமி ழகம் முழுவதும் இந்திய கட்டுமா னத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் ஆட்சியர் அலுவல கம் அருகே வியாழனன்று நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்டத் தலைவர் எம். முரு கேசன் தலைமை வகித்தார். மாவட்  டப் பொருளாளர் டி.தீத்தான் முன்  னிலை வகித்தார். மாநில பொருளா ளர் லூர்துரூபி, சிஐடியு மாவட்டத் தலைவர் கே.ஆர்.கணேசன், கட்டு மானத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் கே. பிரபா கரன் ஆகியோர் பேசினர்.   மாவட்ட நிர்வாகிகள் பி.பாலசுப்ரமணி,  எஸ்.வின்சென்ட், எஸ்.புஸ்பம் மற்  றும் பாக்கியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.  மதுரை  கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி கட்டுமானத்  தொழிலாளர் சங்கத்தின் மதுரை  மாநகர்-புறநகர் மாவட்டக்குழுக் கள் சார்பில்  மதுரை மாவட்ட கட்டு மானத் தொழிலாளர் நலவரிய அதி காரியிடம் மனு அளிக்கப்பட்டது.  சங்கத்தின் மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் சி. சுப்பையா,  மாவட்ட நிர்வாகி அங்குச்சாமி, சிஐ டியு மதுரை மாநகர் மாவட்டத் தலை வர் இரா. தெய்வராஜ், மாவட்டச் செயலாளர் இரா. லெனின், சங்க  புறநகர் மாவட்ட பொதுச் செயலா ளர் மணிராஜ், தலைவர் பிச்சை ராஜன், நிர்வாகி பொன்ராஜ், சிஐ டியு மாவட்டச் செயலாளர் கே.அர விந்தன் உள்ளிட்டோர் அதிகாரி யிடம் மனு அளித்தனர்.

விருதுநகர் 

சிஐடியு கட்டுமானத் தொழிலா ளர் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்ட தொழிலாளர் நல வாரிய  அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆர்.எம்.மாரியப்பன் தலைமையேற்றார். துவக்கி வைத்து மாவட்ட பொதுச் செயலா ளர் பி.ராமர் பேசினார். முடிவில் சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என். தேவா கண்டன உரையாற்றினார். சிஐடியு மாவட்ட துணைத் தலை வர் எம்.சாராள், கட்டுமான சங்க மாவட்ட பொருளாளர் எம்.பரம சிவம், மாவட்ட துணைத் தலைவர்  வி.சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தேனி

தேனி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு கட்டுமானத் தொழி லாளர்கள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் பி.பிச்சை தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  மாவட்டத் தலைவர் எம். ராமச்சந்திரன், செயலாளர் ஜி.சண்  முகம், சிஐடியு மாவட்டத் தலை வர் ஜெயபாண்டி ஆகியோர் பேசி னர். 

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டையில் சிஐடியு நகர் செயலா ளர் அஜீஸ்கான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்ட செயலாளர் முருகேசன், விவசாயத்தொழிலாளர் சங்க  மாவட்டத் தலைவர் பொன்னுச் சாமி, தாலுகா செயலாளர் ஜெயப்  பிரகாஷ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொருளாளர் செல்வ ராஜ் ஆகியோர் பேசினர்.
 

;