திருப்பூர், ஜன.28- இடுவாய் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் 73 ஆவது குடியரசு தின விழா தேசிய கொடி யேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும், இடு வாய் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கே. கணேசன் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். பள்ளித் தலைமையாசிரியர் சரவணன், 5ஆவது வார்டு உறுப்பினர் கே பூவதி பிரகாஷ், 6ஆவது வார்டு உறுப்பினர் பி.ஈஸ்வரி, குமாரசாமி, மௌன சாமி, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் காவிலிபாளையம் புதூர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. பள்ளி பெற்றோர் ஆசிரி யர் கழகத் தலைவர் என்.முத்துசாமி உள்பட பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர். திருப்பூர் அமர்ஜோதி கார்டன் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் அமர்ஜோதி கார்டன் நுழை வாயில் பகுதியில் குடியரசு தின விழா கொண்டாடப் பட்டது. சங்கத்தின் கௌரவத் தலைவர் ரமேஷ் குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சங்கத் தலைவர் டி.கே.தண்டபாணி குடியரசு தின உரையாற்றி னார். செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் பொன்னு சாமி, துணைத் தலைவர் பாபு, சலீம் உள்பட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.