districts

img

குடியிருப்புக்குள் புகுந்த அரிய வகை விலங்கு மீட்பு

திருப்பூர், பிப்.2- அவிநாசி அருகே அரிய வகை விலங்கான புனுகு  பூனை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். திருப்பூர் அருகே மண்ணரை கருமாரம்பாளையம் பகு தியை சேர்ந்தவர் சின்னச்சாமி. புதனன்று காலை இவரது வீட் டிற்குள் அரிய வகை விலங்கு ஒன்று புகுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சின்னச்சாமி மற்றும் அவரது குடும்பத்தி னர் வீட்டிற்குள் இருந்து அலறியபடி வெளியே ஓடி வந்துள்ள னர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் வீட்டிற்குள் புகுந்த  விலங்கை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால்  அந்த விலங்கு அங்கிருந்து நகராமல் வீட்டின் மறைவான பகுதிக்குள் சென்று பதுங்கி கொண்டது.    இதையடுத்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையம் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள், வனத்துறை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டிற்குள் புகுந்த விலங்கை  பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட் டத்திற்கு பின் பதுங்கியிருந்த அந்த விலங்கை பிடித்து கூண் டிற்குள் அடைத்தனர்.   அதேநேரம், வீட்டிற்குள் புகுந்த அரிய வகை விலங்கு புனுகு பூனை என்றும், அடர்ந்த வனப்பகுதியில் மட்டுமே  வாழும் இந்த விலங்கு எப்படி ஊருக்குள் புகுந்தது என்பது  தெரியவில்லை. பிடிபட்ட புனுகுபூனை பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள் பட்டியலில் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.