districts

கோவை முக்கிய செய்திகள்

மின் விளக்குகள் அமைத்து தரக் கோரிக்கை

திருப்பூர், மார்ச்.1- ஆத்துப்பாளையத்திலிருந்து வெங்கமேடு செல்லும் பிர தான சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் பல குற்ற  சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே உடனடியாக மின் விளக்கு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை எழுந் துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றி யக்குழு உறுப்பினர் சந்தோஷ் கூறுகையில், ஆத்துப்பாளை யத்திலிருந்து வெங்கமோடு செல்லும் பிரதான சாலையில்  மின் விளக்குகள் இல்லை. வி.கே.அரசு மேல்நிலைப் பள் ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இவ்வழியை தான்  பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் இப்பகுதி களில் பல சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கருப்புராயன் கோவில் பூசாரி இப்ப குதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொ டர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட் டுள்ளது. இந்த சாலையை பயன்படுத்தும் பள்ளி மாணவ,  மாணவியர்களின் நலன் கருதி உடனடியாக மின் விளக்கு கள் அமைத்து தர வேண்டும் எனத் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா

உடுமலை, மார்ச்.1- திமுக உடுமலை மத்திய  ஒன்றியம் கொங்கலக்கு றிச்சி கிளையின் சார்பில் திரா விட முன்னேற்ற கழகத்தின்  தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டா லினின் 71 ஆவது பிறந்த நாள்  விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. 

உடுமலை மத்திய ஒன் றிய செயலாளர் க.செந்தில் குமார் தலைமையில் நடை பெற்ற இவ்விழாவில், கொங் கலக்குறிச்சி அரசுப் பள்ளி யில் படிக்கும் மாணவ மாண வியர்களுக்கு திருக்குறள் புத்தகம், எழுதுப் பொருள்கள் மற்றும் இனிப்புகள் வழங் கப்பட்டது. பின்னர் அப்பகுதி யில் வசிக்கும் மாற்றுத்திற னாளிகளுக்கு உணவுப்  பொருள்கள் வழங்கப்பட் டது.

இதில், அவைத்தலைவர் துரைசாமி உட்பட திரளான  உறுப்பினர்கள், பொது மக் கள் கலந்து கொண்டனர்.