திருப்பூர், அக்.11- ஊத்துக்குளி தாலுக்காவில் பத் திரப் பதிவுக்குத் தடை விதிக்கப்பட் டுள்ள பகுதிகளில் தடையாணையை விலக்க வலியுறுத்தி நில உரிமையா ளர்கள் சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடு பட்டனர். ஊத்துக்குளி தாலுக்கா, வடுக பாளையம் கிராமத்தில் சிறு இனாம் ஒழிப்பு சட்டப்படி பட்டா பெற்று முறைப்படி ஆவணங்கள் வைத்து அனுபவித்து வரும் நிலங்களை வஃக்பு வாரிய நிலம் என கூறி பத்திரப்பதிவு செய்ய தடையாணை விதிக்கப்பட் டுள்ளது. இந்த தடையாணையை நீக்க கோரி புதனன்று பாதிக்கப்பட்ட அடிமனை பயனாளிகள், வீட்டு உரி மையாளர்கள், நில உரிமையாளர் கள் ஊத்துக்குளி சார் பதிவாளர் அலு வலகத்தை முற்றுகையிட்டனர். முன்னதாக காலை ஈஸ்வரன் கோவில் மைதானத்தில் இருந்து பேர ணியாக புறப்பட்டு பத்திரப்பதிவு அலு வலகத்தை நோக்கி சென்றனர். அப் போது, காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, இந்த இயக் கத்தில் பங்கேற்ற சுமார் 400 பேர் அங் கேயே சாலையில் அமர்ந்து கோரிக் கையை வலியுறுத்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தை அடுத்து ஊத் துக்குளி வட்டாட்சியர் தங்கவேல் தலைமையில் ஊத்துக்குளி சார் பதி வாளர் இளவரசன், காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்தி பன், ஊத்துக்குளி காவல்துறை ஆய் வாளர் கவிதா ஆகியோர் போராட் டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அடுத்த இரண்டு தினங்களுக்குள் உரிய தேதியை முடிவு செய்து, திருப்பூர் சார் ஆட்சி யர் தலைமையில் வஃக்ப் போர்டு அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட் டத்தை ஏற்பாடு செய்வதாக உறுதி யளித்தனர். இதை ஏற்று போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. பி.ராமமூர்த்தி நகர் நில மீட்பு இயக்கம், திருப்பூர் மாவட்ட தமிழ் நாடு அடிமனை பயனாளிகள், குத் தகை விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட இப்போராட்டத்தில் வடுகபாளையம் கிராமம், கேகே நகர், செந்தில் நகர், சரஸ்வதி நகர், மகாலட் சுமி நகர் என பாதிக்கப்பட்ட பகுதிக ளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இப்போராட்டத்திற்கு ஒருங்கி ணைப்பாளர் பி.சண்முகம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு விவசாய சங்க மாவட் டச் செயலாளர் ஆர்.குமார், மாவட்ட கவுன்சிலர் சக்திவேல், கை.குழந்தை சாமி, கே.பெரியசாமி ஆகியோர் உரை யாற்றினர். ஊத்துக்குளி பேரூராட்சி துணைத்தலைவர் வி.ஏ.சரவணன், பேரூராட்சி கவுன்சிலர் பழனிசாமி, ஒன்றிய கவுன்சிலர் நடராஜ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.