திருப்பூர், நவ.6- கோவில் வழி பகுதியில் மாட்டி றைச்சி கடைகளை அகற்றியதை கண் டித்து பாதிக்கப்பட்டவர்களுடன், தீண் டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சி கோவில் வழி முத்தணம்பாளையத்தில் 18 ஆண்டுக ளாக 4 குடும்பத்தினர் மாட்டிறைச்சி கடை நடத்தி வந்தனர். இந்நிலையில் நவ.3 ஆம் தேதி முன் அறிவிப்பு இல்லா மல் மாட்டிறைச்சி கடையை மாநகராட்சி நிர்வாகம் அகற்றி உள்ளது. இதைத்தொ டர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆத ரவாகத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதி தமிழர் பேரவை, ஆதி தமிழர் ஜன நாயக பேரவை உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையரிடம் இது தொடர்பாக அரசு ஆவணங்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து நவ.4 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இந்த பிரச்சனையின் தீவிரத்தைக் கருத் தில் கொண்டு உடனடியாக கடையை மீண்டும் அமைக்க ஆவணம் செய்யப் படும் என்று தெரிவித்தார். ஆனால் வருவாய்த் துறை நடவ டிக்கை எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்களுடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச்செயலாளர் சி.கே.கனகராஜ் மற்றும் முற்போக்கு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் காதிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாநகராட்சி உதவி ஆணையர், துணை வட்டாட்சியர் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். உடன்பாடு எட்டப்படவில்லை. திங்கட்கிழமை உதவி ஆணையர், கிராம நிர்வாக அலு வலர், வருவாய்த்துறை அலுவலர் கள், சர்வையர் ஆகியோர் கடைகள் இருந்த இடத்தை அளந்து போதிய ஆவணங்கள் இல்லை என்று தெரி வித்துக் கடை அமைக்க காலதாமதம் ஆகும் என்று தெரிவித்தனர். இதைய டுத்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர். உடனடியாக தலைமை நில அளவை ஆய்வாளர் மற்றும் திருப்பூர் தெற்கு வட் டாட்சியருக்கு இது தொடர்பாக நட வடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத் தரவிட்டார்.