districts

img

கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு முற்போக்கு அமைப்பினர் ஆவேசம்

கோவை, ஜன.9- வெள்ளலூரில் உள்ள பெரியார் சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் காவிப்பொடி தூவி, செருப்பு மாலை அணி வித்த சம்பவத்தைக் கண்டித்து காந்தி புரத்தில் முற்போக்கு ஜனநாயக அமைப்பி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை வெள்ளலூர் பேருந்து நிறுத்தம் அருகே தந்தை பெரியார் படிப்பகம் உள் ளது. இங்கு திராவிடர் கழகம் சார்பில்  பெரியார் சிலை ஒன்று வைக்கப்பட்டுள் ளது. இந்நிலையில், பெரியார் சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் காவிப் பொடி தூவி, செருப்பு மாலை அணிவித் துள்ளனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள், திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு ஜனநாயக அமைப்பின் நிர்வாகிகள் அப்பகுதியில் ஒன்று கூடினர். மேலும், பெரி யார் சிலை அவமதித்தவர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்ற வாளியை கண்டுபிடித்து விரைவாக கைது செய்ய வேண்டுமென முழங்கினர். இத னையடுத்து காவல் துறையினர் விரைந்து குற்றவாளிகளை பிடிப்பதாக உறுதி அளித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதன் தொடர்ச்சியாக கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு தந்தை பெரி யார் திராவிடர் கழகத்தின் பொதுச்செய லாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விடு தலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட ஜனநாயக அமைப்பினர் கலந்து கொண்ட னர். முன்னதாக கு.ராமகிருட்டிணன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், கருத்தை கருத் தால் எதிர்கொள்ள வக்கற்ற இந்துத்துவ குண்டர்கள் ஊரடங்கில் ஊருக்குள் யாரும் இல்லை என்பதால் கோழைத்தனமாக தந்தை பெரியார் சிலையை அவமதித் திருக்கிறார்கள். தமிழக அரசிற்கு கெட்ட  பெயரை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தோடு இச்செயலை செய்துள்ள னர். எனவே, காவல் துறையினர் உடனடி யாக இந்துத்துவ குண்டர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும், என்றார்.