districts

img

கோவை: தேர்வெழுத அனுமதி மறுக்கும் தனியார் கல்லூரி - மாணவர்கள் போராட்டம்

கோவை, ஜூன் 24- கல்லூரி கட்டணங்களை முழுமையாக செலுத்திய பிறகும் தேர்வெழுத அனு மதி மறுக்கும் ஆதித்யா  தனியார் கல்லூரி நிர்வாகத் தின் நடவடிக்கையை கண் டித்து மாணவர்கள் கல்லூரி நுழைவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், சரவணம்பட்டியை அடுத்த குரும்பபாளையம் பகுதியில் ஆதித்யா தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பாரதியார் பல்கலைகழகத்து டன் இனைக்கப்பட்ட இந்த தனியார் கல்லூ ரியில் ஏராளமான மாணவர்கள் உயர்கல்வி  பயின்று வருகின்றனர். இதற்கிடையே வியா ழனன்று முதல் கல்லூரியில் செமஸ்டர் தேர் வுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், முழுமையான கல்வி கட்டணம் செலுத்தி யும், ஹால் டிக்கெட் தராமலும், கல்லூரிக் குள் விடாமல் ஆதித்தியா கல்லூரி நிர்வா கத்தின் செயலால் மாணவர்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகினர். இத்த கைய நடவடிக்கையை கண்டித்து 60க்கும் மேற்பட்ட  மாணவர்கள் கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், கல்லூரி கட்டணம் கட்டுவதற்கு கொஞ்சம் தாமதமாகிவிட்டது. தாமதமானதற்கான உண்மையான காரணத்தையும் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டோம். அப் போது எதுவும் சொல்லாமல் இப்போது  செமஸ்டர் தேர்வு எழுத வரும்பொழுது உங் களுக்கு ஹால் டிக்கெட் இல்லை. தேர்வு எழுத முடியாது என்று கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கிறது. முகச்சவரம் முழுமையாக செய்யவில்லை என்றால் கூட அபராதம் போடுகின்றனர். அனைத்தையும் சகித்துக் கொண்டு பணத்தை கட்டிவிடுகிறோம். இப் போது எங்களது வாழ்க்கையையே கேள்விக் குரியக்குகிற வகையில் கல்லூரி வளாகத் தில் கூட அனுமதிக்காமல் காவலாளியை விட்டு விரட்டுகின்றனர். எங்களை ஏன் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை? என்கிற கார ணத்தையாவது சொல்லுங்கள் என்று கேட்கி றேம். ஆகவே போராட்டத்தில் ஈடுபடுகி றோம், என்றனர் இதையடுத்து மாணவர்களின் போராட் டத்தையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த  காவல் துறையினர் கல்லூரி மாணவர்களு டனும், கல்லூரி நிர்வாகத்துடனும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், எந்தவித முடி வும் எட்டப்படாத நிலையில், இதனைய டுத்து கோவை மாவட்ட ஆட்சியரை சந் தித்து கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

;