சேலம், அக்.9- பெத்தநாயக்கன்பாளையம் அருகே பள்ளி வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் இயங்கும் தனியார் பள்ளிக்கு சொந்தமான 2 பேருந்துகள், பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு திங்களன்று காலை பெரிய கிருஷ்ணாபுரம் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றது. அப்போது, ஆத்தூரி லிருந்து சேலம் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து, இரு பள்ளிப்பேருந்துகள் மீதும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பலமாக மோதியது. இவ்விபத்தில் இரண்டு பள்ளிப் பேருந்துகளில் பயணித்த குழந்தைகள் 10க்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து சென்று பள்ளிக் குழந்தைகளை மீட்டு சிகிச்சைக் காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிப் பேருந்து விபத்தானது குறித்து தகவல் வெளியானதால், பெற் றோர்கள் விபத்து நடந்த பகுதியில் குவிந்ததால் பரபரப் பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. ஏத்தாப்பூர் போலீ சார் வாகனங்களை விபத்துக்குள்ளான வாகனங்களை அப் புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் செ.கார்மே கம், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் பள்ளிக் குழந்தைகளை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும், அக்குழந்தைக ளுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்து மருத்து வர்களிடம் கேட்டறிந்தார். இவ்வாய்வின்போது, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் தனபால், வருவாய் கோட் டாட்சியர் அம்பாயிரநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.