districts

img

தொகுதி மேம்பாட்டு நிதியில் பூங்கா சுற்றுச்சுவர் பி.ஆர்.நடராஜன் எம்பி., திறந்து வைத்தார்

கோவை, அக்.18 - நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.16 லட்சம் மதிப்பீட் டில் பூங்கா சுற்றுச்சுவர் நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் அமைக் கப்பட்டிருந்தது. இதனை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் புதனன்று திறந்து வைத் தார். கோவை மாவட்டம், நரசிம்ம நாயக்கன்பாளையம் பேரூராட்சி யில் முத்துநகர் உள்ளது. இந்த பகுதியில் உள்ள பூங்காவுக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் பி.ஆர்.நடராஜன் எம்பி.,யிடம் கோரிக்கை வைத்தனர். இதனையேற்று, பூங்கா சுற்றுச்சுவர் அமைத்திட பி.ஆர்.நடராஜன் எம்பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ. 16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனைத்தொடர்ந்து கட்டு மானப்பணிகள் நடைபெற்று வந்த  நிலையில், தற்போது அது நிறை வடைந்துள்ளது. இதனையடுத்து, இதன் திறப்பு விழா புதனன்று நடை பெற்றது. இதனை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பூங்கா சுற்றுச்சுவரை திறந்து வைத்தார்.  இந்நிகழ்வில் நரசிம்மநாயக் கன்பாளையம் பேரூராட்சி தலைவர் மரகதம் வீரபத்திரன், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்  கார்த்திக், பேரூராட்சி துணைத்  தலைவர் வி.பி.சண்முகசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் கே.அஜய்குமார், கே.எஸ்.கனகராஜ், ஒன்றியச் செயலாளர் மோகன் ராஜ், மாவட்டக்குழு உறுப் பினர் ராஜா, ஒன்றியக்குழு உறுப் பினர் தேவராஜ் உள்ளிட்ட திரளான  பொதுமக்கள் கலந்து கொண் டனர். முன்னதாக, முத்துநகர் பகுதி மக்கள் கூறுகையில், இங்குள்ள பூங்காவிற்குசுற்றுச்சுவர் அமைக்க  வேண்டும். இதற்கான நிதியை தொகுதி மேம்பாட்டு நிதி யில் இருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத் தோம். இதனையேற்று உடனடி யாக நிதி ஒதுக்கீடு செய்து, கட்டு மான பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தீவிரப்படுத்தினார். தற்போது இப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், திறப்புவிழா செய்யப் பட்டுள்ளது. எங்களின் கோரிக்கை  ஏற்று, வெறும் வாய் வார்த்தையாய்  இல்லாமல் செயலில் நிரூபித்து காட்டிய பி.ஆர்.நடராஜன் எம்பிக்கு  நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித் துக்கொள்கிறோம் என்றனர்.