districts

பால் பண்ணைக்குள் புகுந்து தாக்குதல்

கோவை, ஜூன் 13- கோவையில் பால் பண் ணைக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட பாஜக பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.  கோவை டி.பி.ரோடு, ஆர். எஸ்.புரம் கென்னடி தியேட்டர் வளாகத்தில் பால் பண்ணை நடத்தி வருபவர் அபிநயா. பிரபல பால்பண்ணை உரிமையாளரான அபிநயாவிடம், 2021 ஆம் ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கென்னடி தியேட்டர் வளாகத்திற்கு சொந்தக்காரர் என்று கூறி பாஜக ஆன்மீக பிரிவு மாவட்ட பொறுப்பாளர் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி பாரதி ஆகியோர் பால் பண்ணை நடத்துவதற்காக காலி இடத்தை வாடகைக்கு கொடுப்பதாக கூறி உள்ளனர். தொடர்ந்து மணிகண்டன் மற்றும் பாரதி வங்கிக்கணக்குகளில் ரூ.21 லட்சத்து 50 ஆயிரமும், ரொக்கமாக ரூ.30 லட்சமும் என 51 லட்சத்து 50 ஆயிரத்தையும் அபிநயா கொடுத்துள்ளார்.  இந்நிலையில், மாட்டு பண்ணை நடந்து வந்த நிலை யில் திடீரென சில நபர்கள் மாட்டு பண்ணையை காலி செய்ய வேண்டும் என்று மிரட்டி யுள்ளனர். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு மணிகண்டன் மற்றும் அவரது மனைவி பாரதி ஆகியோர் பால் பண்ணை உரி மையாளர் அபிநயாவை மீண்டும் மிரட்டியும், லைட் ஹவுஸ் சாலை யிலிருந்து மாட்டுபண்ணைக்கு வரும் வழியையும் அடைக்க முயற்சி செய்தனர். இதனைத் தொடர்ந்து அபிநயா, ஆர்எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  இந்நிலையில், பால் பண் ணையில் சூப்பர் வைசராக பணி புரிந்து வரும் அனார் உசேன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. அனார் உசேன் அளித்த புகாரின் பேரில், போலீ சார் ஆனந்தனை கைது செய்து  சிறையில் அடைத்தனர். மேலும்,  தலைமறைவாக உள்ள பாஜக ஆன்மீக பிரிவு மாவட்ட பொறுப் பாளர் மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர்.