சாதி ஆணவ படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றவும், நெல்லையில் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் வழக்கில் தொடர்புடைய அனை வரையும் கைது செய்ய கோரி, திருச்செங்கோட்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கொல்லப்பட்டி கிளைச் செயலாளர் கோபி என்கிற அரசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், ஒன்றிய குழு உறுப்பினர் தினகரன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் ஆர்.வேலா யுதம், நகர செயலாளர் எஸ்.சீனிவாசன் , கட்சியின் மூத்த தோழர் ஏ.ஆதிநாராயணன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.