அவிநாசி, மே 27- அருந்ததியருக்கு சொந்தமான மடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி அச்சமுதாய மக்கள் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத் தில் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகாமையில் அரசாங்கம் சார்பில் அருந்ததிய சமு தாயத்திற்கு இடம் ஒதுக்கீடு செய் யப்பட்டது. இந்த இடத்தில் 2015 ஆம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சி யர் கோவிந்தராஜின் ஏற்பாட்டில் மடம் கட்டும் பணி துவங்கியது. இதற்கி டையே மாவட்ட ஆட்சியர் பணியிட மாற் றம் காரணமாக அப்பணி நிறுத்தம் செய்யப்பட்டது. தற்போது அச்சமுதா யத்தைச் சேர்ந்த மக்கள் அவிநாசி தேர்த்திருவிழாவின் போது நீர், மோர் இலவசமாக வழங்கும் பணிக்காக மட் டும் மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மடத்தின் சாவினை அறக்கட்டளை நிர்வாகிகளிடம் கொடுத் துள்ளனர். மேலும் திருவிழா முடிந்த பிறகு மடத்தின் சாவி அரசிடம் மீண்டும் ஒப்படைக்கப்படுகிறது. எனவே, இந்த மடத்தில் இலவச மாக குழந்தைகளுக்கு வகுப்பு எடுப் பதற்கும், பல்வேறு வசதிகளுக்காவும் பட்டா வழங்க வேண்டும் என வலியு றுத்தி அவிநாசி வட்டாட்சியர் அலுவ வலகத்தில் அருந்ததியர் மக்கள் மனு அளித்தனர்.