districts

img

சாலை துண்டிப்பால் மக்கள் அவதி

நாமக்கல், ஆக. 22-  பள்ளிபாளையம் அருகே சாக்கடை கால்வாய் அமைப்ப தற்காக பிரதான சாலை துண்டிக்கப்பட்டதால் கல்லூரி, பள்ளி  செல்லும் மாணவ மாணவியர் பொதுமக்கள் என பல்வேறு  தரப்பினர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், கடந்த மூன்று  ஆண்டுகளுக்கு மேலாக சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பா லம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்  ஒரு பகுதியாக பள்ளிபாளையம் பேருந்து நிலையத்திலி ருந்து  தனியார் காகித ஆலை சாலை வழியாக ஆர்.எஸ்.ரோடு  பிரிவு சாலை எனும் பகுதி உள்ளது. இங்கு சாக்கடை கால் வாய் அமைப்பதற்காக பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந் ததாரர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக சாலையில் பள்ளம் தோண்டி, சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் . ஒரு சில தினங்களில் பணிகள் நிறைவு பெறுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10 நாட்களுக்கு மேலாகியும் பணிகள் நிறைவு பெறாத நிலை உள்ளது. இதன் கார ணமாக காகித ஆலை சாலை வழியே உள்ள வசந்த நகர்,  காவேரி ஆர்.எஸ், புதுப்பாளையம், தாஜ் நகர் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கல்லூரி மாணவ,  மாணவியர், பள்ளி சென்று வரும் காலியிடம் பிரதான சாலைக்கு வந்து சென்றனர். தற்போது இந்த  சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால் தினந்தோ றும் மாணவ மாணவியர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அவ திக்குள்ளாகி வருகின்றனர்.  எனவே போர்க்கால அடிப்படையில் சாக்கடை கால்வாய்  கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தார்  சாலை அமைத்து மீண்டும் பழையபடி சாலையை மக்கள்  பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.