திருப்பூர், டிச. 8- இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு மாடல்கள் முதலாளித்துவ வளர்ச்சிக்கு உதவியுள்ளன. அதேசம யம் இடதுசாரிகள் முன்வைக்கும் வளர்ச்சி மாடல் என்பது மக்களை மையப்படுத்தியதாக, அவர்கள் வாழ்வை மேம்படுத்துவதாக இருக்கி றது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ் கூறினார். திருப்பூரில் நடைபெற்ற பத்து நாள் தொடர் வகுப்பின் எட்டாம் நாள் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்திய மாணவர் சங்க நிர்வாகி ஷாலினி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே கன கராஜ் மக்களுக்கான மாடல் எது என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியது வருமாறு: நாடு விடுதலை அடைந்த பின்னர் பல்வேறு திட்டங்கள் நடைமுறை படுத் தப்பட்டன. முன்னதாக சோவியத் சோச லிச புரட்சி நடைபெற்ற பின் ரஷ்யாவில் மக்கள் வாழ்கையில் அடிப்படையான மாற்றங்கள் ஏற்பட்டன. அதுவும் உல கம் முழுவதும் பல்வேறு நாடுகளின் உழைக்கும் மக்களிடம் பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்திய அரசு தொழில் வளர்ச்சி திட்டங்களுக்கு வளர்ந்த முதலாளித்துவ நாடுகளை நாடியது. ஆனால் அந்த நாடுகள் இந்தி யாவுக்கு உதவ மறுத்துவிட்டன. இந்தியாவில் முதலாளிகள் பெரும ளவு முதலீடு செய்து அடிப்படையான, கனரக தொழில்களை தொடங்க வசதி இல்லாமல் இருந்ததால் அரசு பொதுத் துறை மூலம் கனரக தொழில்களை தொடங்கியது. அப்போது தான் நேரு அரசு, ஆவடி சோசலிசம் என்ற முழக் கத்தை முன்வைத்தது. அதே போல் இந்திரா காந்தி 20 அம்சத் திட்டத்தை அமல்படுத்த தொடங் கினார்.
குஜராத் மாடல் என்று முன்வைப் கப்பட்ட வளர்ச்சி மாதிரி கார்ப்பரேட் பெரு முதலாளிகள் வளர்ச்சி பெற வழி வகுத்தன. ஆனால் மக்களுக்கு, தொழி லாளர்களுக்கு அந்த வளர்ச்சி பயன் அளிக்கவில்லை. குஜராத்தில் அமைப்பு சார்ந்த தொழில்களில் ஈடுபட் டுள்ள தொழிலாளர்கள் வெறும் 4 சத விகிதம் தான். 96 சதவிகித தொழிலா ளர்கள் முறை சாரா தொழிலில் எந்த சட்ட, சமூகப் பாதுகாப்பும் இல்லாதவர் களாக உள்ளனர். தமிழகத்தில் திமுக முன் வைத்து பிரச்சாரம் செய்து வரும் திராவிட மாடல், இங்குள்ள சமூக எதார்த்த நிலை மைகளில் மேல் மட்டத்தில் இருப்பவர் களுக்கு மட்டும் இல்லாமல் மற்றவர்க ளுக்கும் பலன் அளிக்கக்கூடியது என்று சொல்கின்றனர். மனித வளர்ச்சி சமூக குறியீடுகளில் மட்டும் இல்லாமல் தொழில் வளர்ச்சி ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். எனினும் எந்த ஒரு செயலாக இருந் தாலும் அதன் நோக்கம், விளைவு என்ன என்று பார்க்க வேண்டும். அப்படி பார்த் தால், அனைத்து மாடல்களும் முதலா ளித்துவ வளர்ச்சிக்குத் தான் பயன்பட்டு வருகின்றன. மேலே இருக்கும் பாத்திரத்தில் தண் ணீர் ஊற்றினால் அது நிரம்பி வழிந்து கீழே இருப்பவர்களுக்கு பலனளிக்கும் என்ற அடிப்படையை கொண்டவை தான்.அதேசமயம் கேரளாவில் இடது ஜனநாயக மாடல் மக்களை மையப்ப டுத்திய திட்டமிடல் ஆகும். பொதுத்து றைகளை பாதுகாப்பது, நிலச் சீர்திருத் தம், தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ஆகியவற்றை நிறை வேற்றி மனித வளர்ச்சி குறியீட்டில் சிறந்து விளங்குகிறது. இவ்வாறு கே.கனகராஜ் கூறினார்.