நாமக்கல், செப்.6- தாழ்வான பகுதியில் வடி கால் அமைக்கும் பணி நடை பெறுவதாக வதந்தி பரவி யதால் திருச்செங்கோடு நகராட்சியை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி 1ஆவது வார்டு சீதாராம் பாளையம் பகுதியில், பழனி யாண்டவர் கோவில் தோட்டத்தி லிருந்து முனியப்பன் கோவில் பகுதி வரை மழைக்காலங்களில் முழங்கால் அளவு தண்ணீர் சாலையில் தேங்குவ தால், பொதுமக்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வந்தனர். இதற்காக நகராட்சி, தொண்டிக்கரடு பகுதிகளில் இருந்து வெளியேறும் மழை நீர் கூட்டப்பள்ளி ஏரியை சென்றடையும் வகையில் வடிகால் அமைக்க திட்டம் நிறைவேற்றப்பட்டு, பணிகள் தொடங் கப்பட்டுள்ளது. இந்நிலையில், முட்டுக்காரன் காடு வரை வடிகால் அமைக்கப்பட்ட போது சூரியம்பாளையம் ஊருக்குள் செல்லாமல் வடிகாலை அமைக்குமாறு கோரிக்கை எழுந்ததால், மாற்றுப் பாதை ஆய்வு நடந்து வருகிறது. இந் நிலையில், சட்டையம்புதூர் வழியாக வடிகால் அமைக்கப்படும் என பொது மக்களிடம் தகவல் பரவியது. இப்பகுதி,
ஏற்கனவே சாலையில் இருந்து 4 அடி தாழ்வாக உள்ள தங்களது ஊர் வழி யாக வடிகால் அமைக்கப்பட்டால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதிபடும் நிலை வரும் என கருதிய பொதுமக்கள் அனை வரும் ஒன்று திரண்டு, 500க்கும் மேற் பட்டோர் ஒன்று திரண்டு நகராட்சி அலுவ லகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகர் மன்றத் தலைவர், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சட்டையம் புதூர் பகுதி வழி யாக வடிகால் அமைக்கப் படும் என உங்களிடம் தெரி வித்தவர்கள் யார்? இது வெறும் வதந்தி, நிச்சயமாக நூற்றுக்கு நூறு சதவிகிதம் அந்தப் பகுதியின் வழியாக வடிகால் அமைக்கும் எண்ணம் இல்லை. மாற்றுப் பாதையை தேடிக் கொண்டிருக் கிறோமே தவிர, ஏற்கனவே தாழ்வான பகுதியில் உள்ள உங்கள் ஊரில் மேலும் மழை நீர் தேங்க நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காது என தெரிவித்தார். மேலும், எந்த தவறான தகவலை யும் நம்பி ஏமாற வேண்டாம். பொது மக்கள் எதுவாக இருந்தாலும் நக ராட்சி தரப்பில் கேட்டுக் கொண்டு புகார் தெரிவியுங்கள். பொது மக்களின் நலனுக்கு எதிராக எந்த நடவடிக்கை யும் நகராட்சி நிர்வாகம் எடுக்காது என்றார். இதனையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.