districts

img

தரமான உபகரணங்கள் வழங்கிடுக பட்டுக்கூடு விவசாயிகள் சங்கம் தீர்மானம்

நாமக்கல், ஜூன் 29- பட்டுகூடு உற்பத்தி விவசாயிகளுக்கு தர மான உபகரணங்கள் வழங்கவும், உடனடி யாக பணம் பட்டுவாடா செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள்  நலச் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றி னர். நாமக்கல் தனியார் அரங்கத்தில் தமிழ் நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்  சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்  நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் பிரபு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் செந்தில் குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டப் பொருளாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயி கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம். செல்வராஜ், மாநிலச் செயலாளர் என்.பொன் னுச்சாமி ஆகியோர் உரையாற்றினர்.  இதில் தீர்மானங்களாக, அரசு மானியத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கொடுக் கப்படும் உபகரணங்கள் தரமானதாக இருப் பதை உறுதி செய்ய வேண்டும். அங்காடி யில் விற்பனை செய்யப்படும் பட்டுக்கூடுக ளுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய் யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பட்டு  வளர்ச்சி துறை இயக்குனரகம் வெளியிடும் உத்தரவுகளை அதிகாரிகள் செயல்படுத்து வதை கண்காணித்து செயல்பட வேண்டும். விதி மீறி செயல்படும் இளம்புழு மையங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதம்  இருமுறை அனைத்து பட்டு விவசாயிகளின் குழு வளர்ப்புமனையை ஆய்வு செய்து  தேவையான தொழில்நுட்ப ஆலோசனை களை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.

;