districts

img

பினராயி விஜயனின் ஓவியம்

நாமக்கல், ஏப்.18- பினராயி விஜயனின் ஓவியத்தை வரைந்த மார்க்சிஸ்ட் கட்சியின் குமரபா ளையம் கட்சி கிளை உறுப்பினர் கேரள  மாநில முதல்வர் பினராயிடம் வழங்கி னார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி கிளை  உறுப்பினர் சரவணன். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலை ஞர்கள் சங்க நிர்வாகியகவும் உள்ளார். நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி கேரள மாநிலத்தில் இடது முன்னணி தேர்தல் பணிக்குழு சார்பில் அவருக்கு பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரம் வரைவதற்கான பணிகள் வழங் கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, கேரள மாநி லத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கி இருந்து  தேர்தலுக்காக இடது முன்னணி அமைப் பின் தேர்தல் பிரச்சார சுவர் விளம்பரம்  செய்யும் பணியில் சிறப்புற மேற்கொண் டார். இந்நிலையில் இடது முன்னணி சார்பில்  திருச்சூர் மாவட்டம் வடக்கான்சேரி பகுதி யில் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த கேரள முதல மைச்சருக்கு  தனது கையால் வரைந்த பினராயி விஜயனின் ஓவியத்தை சரவணன்  பரிசாக வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட பினராயி விஜயன் சரவணனின்  பணிகளை வெகுவாக பாராட்டினார்.