districts

img

“எங்கள் முதல்வர் எங்கள் பெருமை”

கோவை, ஏப்.11- கோவை வஉசி மைதானத்தில் நடை பெற்று வரும் “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” வரலாற்று புகைப்பட கண்காட்சி  பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  கோவை வஉசி மைதானத்தில் “எங்கள் முதல்வர்,  எங்கள் பெருமை”  புகைப்பட கண் காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளி யன்று, மின்சாரத்துறை அமைச்சர் வி.செந் தில்பாலாஜி தலைமையில், திரைப்பட நடி கர் சத்தியராஜ் திறந்து வைத்தார். 15 ஆயி ரம் சதுரடி பரப்பளவில், 500 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. தமிழக முதல்வரின் சிறு வயது புகைப்படம் முதல், சென்னை மேயர்,  துணை முதல்வர், தற்போது முதல்வர் என  அரசு பொருப்புகளில் அவர் ஆற்றிய பணிக ளும், திமுகவில் கடந்து வந்த பாதைகள், மிஸா சிறைவாசம் என புகைப்படங்கள் காட்சி  படுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்திற்கு அவர் கொண்டு வந்த திட்டங்கள் என  அனைத்தும் புகைப்படங்களாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.  இக்கண்காட்சியை காண திமுகவினர் மட் டுமல்லாது, பொதுமக்களும் ஆர்வத்துடன் வருகின்றனர். மேலும், பட்டிமன்றபேச்சாளர் திண்டுக்கல் லியோனி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், திரைப்பட பாடகர் வேல் முருகன், கிராமிய பாடகர்கள் செந்தில்முரு கன், ராஜலட்சுமி ஆகியோர் பங்கேற்ற  கலை நிகழ்ச்சிகளும் இதுவரை நடைபெற் றுள்ளது. தினசரி திரைக்கலைஞர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் உள் ளிட்ட பிரபலங்களை வரவழைத்து, பல்சுவை  நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இக்கண்காட் சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு களிக் கின்றனர்.