districts

img

சுங்க கட்டண உயர்விற்கு எதிர்ப்பு

சேலம், செப்.10- சுங்கக்கட்டண உயர்வைக் கண்டித்து, சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஆண்டு தோறும் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி, நடுத்தர மக்களை பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. உயர்த்தப் பட்ட கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும்.காலாவதி யான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யினர் செவ்வாயன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக சேலம் கோட்டை மைதானத்திலுள்ள ஸ்டேட் பேங்க் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.மோகன் தலைமை வகித்தார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.