நாமக்கல், செப்.4- சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள தனியார் கல்லூரிகளில் வியாழனன்று ஓணம் பண்டிகை கொண் டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரள மன்னன் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்றும், கேரளாவின் அறுவடை திருவிழாவாகவும் ஓணம் கொண்டாடப்படு கிறது. இந்த பண்டிகை கேரளம் மட்டுமின்றி தமிழகப் பகு திகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்தவகை யில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்வி நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது. கல்லூரி மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்தும், அத்தப்பூ கோலமிட்டும் மகிழ்ந்தனர். இவ்விழாவில், கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆர்.சீனி வாசன், அட்மின் இயக்குநர் மோகன், திரைப்பட இயக்கு நரும், நடிகருமான சண்முகராஜா, திரைக்கலைஞர்கள் ராஜு ஜெயமோகன், மிருணாலினி ரவி உட்பட பல கலந்து கொண்டனர். இதேபோன்று, குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் ஆயிரக் கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட னர். இதேபோன்று, சேலம் மாவட்டம், சங்ககிரியி லுள்ள விவேகானந்தா கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டு, வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 
                                    