எல்லா தெருக்களிலும்
வீடு காலியாய் இருக்கிறது
கூடவே
தண்ணீர் தொட்டிகளும்.
••••
கத்திரி வெயில்
துண்டு
துண்டாய்க்
கிடக்கிறது
நிழல்.
•••••
தேன் உறிஞ்சும்
வண்டைக் கண்டால்கூட
பொறாமையாய்
இருக்கிறது
சுகரோடு சுற்றுகையில்.
•••••
பட்டிக்காட்டான்
மிட்டாய்க் கடையை
கண்டதுபோல்
நகரத்தான் நோக்குகிறான்
தண்ணீர் லாரிகளை.
•••••
வாசிக்க முடியாதபடி
நனைந்து விட்டது
மழைக் கவிதை எழுதிய
காகிதம்.