districts

img

எண்ணும் எழுத்தும் திட்டம்

உதகை, மார்ச் 24- எமரால்டு அரசு பள்ளி யில் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், ஏராளமான சிறுவர், சிறுமிகள் பங்கேற்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி கள் மூடப்பட்டிருந்ததால் ஏற்பட்டிருந்த  கற்றல் இடைவெளியை ஈடுகட்ட சரிசெய்ய  தமிழ்நாட்டில் எண்ணும் எழுத்தும் திட்டம்  தொடங்கப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும்  திட்டத்தின் தொலைநோக்கு 2025-க்குள்  அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ண றிவைப் பெறவேண்டும் என்பதாகும்.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாண வர்களும் 8 வயதிற்குள் பொருள் புரிந்து  படிக்கும் திறனையும் அடிப்படைக் கணிதச்  செயல்பாடுகளைச் செய்யும் திறன்களை யும் பெற்றிருக்க வேண்டும் என்பது இதன்  நோக்கமாக உள்ளது. கல்வியில் இதுவரை  நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின்  பயனாக அறிவியல் மனப்பான்மை மற்றும்  சமூகத் திறன்களுடன் இணைந்த மொழிக்  கற்பித்தலில் மாணவர்களின் கற்றல்  நிலையை அடிப்படையாகக் கொண்டு   ஒருங்கிணைத்து அளிக்கப்பட வேண்டும்  என்பதை எண்ணும் எழுத்தும் திட்டம்  

இலக்காகக் கொண்டுள்ளது. இதன்படி  தமிழ்நாட்டிலுள்ள ஒன்று முதல் மூன்று  வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணக்குப்  பாடங்கள், சூழ்நிலையியல் பாடக்கருத்துக் களுடன் ஒருங்கிணைந்து கற்பிக்கப்படும். இந்நிலையில், உதகையை அடுத்த எமரால்டு அரசு தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம்  1, 2, 3  வகுப்புகளில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் அர்ஜுனன் பெற்றோர்களை வர வேற்றுப் பேசினார். இதைத்தொடர்ந்து,  உதவி ஆசிரியர்  சாரா, எண்ணும் எழுத்தும் திட்டத்தின்  சிறப்பம்சங்கள் குறித்து மாணவர்களுக் கும், பெற்றோர்களுக்கும் விளக்கினார். அப்போது, இந்தத் திட்டத்தின் மூலம் எந் தெந்த பயன்களை மாணவர்கள் பெறு கிறார்கள் என்று செயல் விளக்கம் அளிக்கப் பட்டது. இதில்,மாணவிகள் பல்வேறு வண்ண  உடைகளில் கலந்து கொண்டு ஆடல், பாட லுடன் விளக்கம் அளித்தனர். இந்த நிகழ் விற்கு அனைத்து பெற்றோர்களும் ஆர்வ முடன் மாணவர்கள் செய்த செயல்பாடுகளை  பார்த்து மிகவும் ரசித்தனர்.  இதைத்தொடர்ந்து, மாணவ- மாணவிகள் முன்னிலையில் பெற்றோர்களுக்கு போட்டி கள் நடைபெற்றது. வெற்றி பெற்ற பெற்றோர் களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

;