அவிநாசி, ஜூலை 4- அவிநாசி அருகே நடுவச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி பழனிச்சாமி படத்திறப்பு விழா மற்றும் புகழஞ்சலி கூட்டம் ஞாயி றன்று நடைபெற்றது. அவிநாசி ஒன்றியம், நடுவச்சேரி ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகி எம். சி. பழனிச்சாமி படத்திறப்பு விழா மற்றும் புகழஞ்சலி கூட்டம் நவநீதன் தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக் குழு உறுப்பினர் கே.காமராஜ் என். சி.பழனிச்சாமி படத்தைத் திறந்து வைத் தார். இதை தொடர்ந்து புகழஞ்சலி நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் செ. முத்து கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.வெங்கடாசலம், ஒன்றியச் செயலா ளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றிய கவுன்சிலர் முத்து சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலை வர்கள் பழனிச்சாமி, சாமியப்பன், திரா விட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நடுவச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் கே.சி.வரதராஜன், சின்னேரிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், வடுகபாளையம் ஊராட்சி மன்ற தலை வர் சுப்பிரமணி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வேலுச்சாமி, உள்ளிட்டோர் புகழஞ்சலி உரை நிகழ்த்தினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப் பினர்கள் சண்முகம், பாலசுப்பிரமணி யம், ராஜன், தேவி, கருப்புசாமி, மோக னசுந்தரம் திருமுருகன்பூண்டி நகர மன்ற உறுப்பினர்கள் தேவராஜன், சுப்பி ரமணியம், வடுகபாளையம், நடுவச் சேரி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ராம சாமி, அய்யம்மாள், தீபா, ரங்கசாமி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் மல்லப்பன், குமாரசாமி, கிளைச் செயலாளர் பொன்னுச்சாமி, லதா, சின்னராசு, கோமதி, லட்சுமி உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.