districts

img

மாதர் சங்க மாநாடு

கோவை, ஜூன் 25- குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீர்படுத்த வேண் டும் என, மாதர் சங்க பீளமேடு நகர மாநாடு வலியுறுத்தி யுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை,  பீளமேடு நகர முதல் மாநாடு, செவ்வாயன்று நடைபெற்றது. நகரக்குழு உறுப்பினர் ராணி தலைமை வகித்தார். மாவட் டக்குழு உறுப்பினரும், மாமன்ற உறுப்பினருமான கண்ணகி ஜோதிபாசு வரவேற்றார். மாவட்டத் தலைவர் சி.ஜோதிமணி மாநாட்டை துவக்கவுரையாற்றினார். தலைவர் அமுதா அறிக் கையை முன்வைத்தார். இதில், நேதாஜி நகர் பகுதியில் சாலை  மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் நகரத் தலைவராக சுமதி, செயலாளராக அமுதா,  பொருளாளராக சாரதா மணி உள்ளிட்ட 10 பேர் கொண்ட  நகரக்குழு தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச் செயலாளர் டி.சுதா நிறைவுரையாற்றினார்.