districts

img

மழையால் பாதித்த குடியிருப்பில் எம்எல்ஏ நேரில் ஆய்வு

திருப்பூர், மார்ச் 25 - பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளில் கவனம் செலுத்தாவிட்டால் சட்டமன்றத்தில் பேசி இடமாற்றம் செய்ய  நேரிடும் என அதிகாரிகளுக்கு செல்வராஜ் எம்எல்ஏ எச்ச ரிக்கை விடுத்தார். திருப்பூர் - பல்லடம் சாலை தென்னம்பாளையம் டிஎம்சி காலனியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் வெள்ளியன்று திருப்பூர் மாவட்டத்தில்  இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதி குடியிருப்புகளுக்குள் மழை நீரோடு, சாக்கடை நீரும் சேர்ந்து புகுந்தது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தீர்வு காண வேண்டும்  என கோரிக்கை வைத்த நிலையில் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் சனியன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது ஆய்வு மேற்கொண்ட திருப்பூர் தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் செல்வராஜ் கூறுகையில், தூய்மை பணியா ளர்கள் குடியிருக்கும் இப்பகுதியில் அதிகாரிகள் அலட்சியப்  போக்குடன் செயல்படுவதாகவும், ஊர் முழுவதும் சுத்தம்  செய்யும் தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதியை அதிகா ரிகள் வேண்டுமென்றே புறக்கணிப்பது போல் தோன்று வதாகவும், இதே நிலை நீடித்தால் அதிகாரிகளின் அலட்சிய  போக்கு குறித்து சட்டமன்றத்தில் பேசி இடமாற்றம் செய்ய  நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். இனியும் இதுபோன்று குடி யிருப்பு பகுதிக்குள் மழைநீர் செல்லாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

;