districts

img

மே 16, 17 வேலை நிறுத்தம்:அங்கன்வாடி சங்கம் ஆதரவு

திருப்பூர், மே 13- திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய தொழிலாக உள்ள ஜவுளித் தொழி லையும், லட்சக்கணக்கான மக்க ளின் வேலைவாய்ப்பையும் பாது காக்கும் நோக்கத்தில் நூல் விலை  உயர்வுக்கு எதிராக ஜவுளி கூட்ட மைப்பினர் நடத்தும் மே 16, 17 ஆகிய இருநாட்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் 4  ஆவது மாநாடு ஆதரவு தெரிவித் துள்ளது. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர்கள் சங்கத் தின் திருப்பூர் மாவட்ட 4 ஆவது  மாநாடு காங்கேயம் சென்னிமலை சாலையில் உள்ள தனியார் மண்ட பத்தில் வெள்ளியன்று தொடங்கி யது. சங்கத்தின் மாவட்டத் தலை வர் டி.சித்ரா தலைமை வகித்தார். சிஐடியு மற்றும் அங்கன்வாடி சங்க கொடிகளை என்.வெண்ணிலா, ஜி.தனலட்சுமி ஆகியோர் ஏற்றி வைத்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் கே. சித்ரா வரவேற்க, சிஐடியு திருப்பூர் மாவட்ட செயலா ளர் கே.ரங்கராஜ், இம்மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.

சிஐடியு மாநில செயலாளர் கே.சி.கோபி குமார், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி, மாநிலத் துணைத் தலை வர் எம்.பாக்கியம் ஆகியோர் பங் கேற்று வாழ்த்திப் பேசினர். இந்த மாநாட்டில், நூல் விலை  உயர்வு காரணமாக தமிழகத்தின் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பின்னலாடை உற்பத்தி நிறுவனங்க ளும் விசைத்தறி மற்றும் கைத்தறி தொழிலும் கடுமையாக பாதிக்கப் பட்டு உள்ளது. இதனால் பல ஆயி ரக்கணக்கான பெண்கள் உள்பட தொழிலாளர்களின் வேலை வாய்ப் பும், வருமானமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒன் றிய அரசு நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், ஜவுளித் தொழி லைப் பாதுகாக்கவும் வலியுறுத்தி திருப்பூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு ஜவுளி தொழில் மையங்க ளில் மே 16, 17 தேதிகளில் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதாக ஜவுளித் தொழில் கூட்டமைப்பினரும்,  தொழிற் சங் கங்களும் அறிவித்துள்ளன.  மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த இந்த வேலை நிறுத்தப் போராட் டத்தை அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் முழுமையாக ஆதரிக்கிறது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை அனைத்துப் பகுதி மக்களும் ஆத ரித்து வெற்றி பெறச் செய்ய வேண் டும் என்று இந்த மாநாட்டில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டின் நிறைவாக சனிக்கிழமை மாலை காங்கேயம் தாலுகா அலுவலகம் முன்பிருந்து பேரணி, பொது மாநாடு நடைபெறுகிறது.