நாமக்கல், ஜன.31- குமாரபாளையம் நகராட்சி, 12 ஆவது வார்டுக்கு மார்க் சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜி.சண்முகம் வேட்பு மனுத்தாக் கல் செய்தார். நாமக்கல் மாவட்டம். குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12வது வார்டு உறுப்பினர் பதவி ஒதுக்கீடு செய்யப் பட்டது. இதையடுத்து திங்களன்று குமாரபாளையம் நக ராட்சி தேர்தல் அதிகாரியிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பா ளர் ஜி.சண்முகம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில், சிபிஎம் நகரச் செயலாளர் என்.சக்திவேல், விசைத்தறி தொழி லாளர் சங்க கிளைத் தலைவர் பி.என்.வெங்கடேசன் உள் ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.