சேலம், அக்.13- சேலத்தில் அஞ்சல் வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்திய அஞ்சல் துறையின் சார்பில் ஆண்டுதோறும் அஞ்சல் வார விழா அக்டோபர் மாதம் கொண்டாடப்பட்டு வரு கிறது. இந்த விழாவை முன்னிட்டு அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் துறையில் உள்ள பல்வேறு திட்டங்கள், புதிய சேமிப்பு கணக்குகள் மற்றும் இன்சூரன்ஸ் திட்டங்கள் தொடங்கு வதற்கான சிறப்பு முகாம்கள் ஆங்காங்கே நடைபெற்று வரு கிறது. முகாம்கள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் சேமிப்பு கணக்குகளையும், இன்சூரன்ஸ் திட்டங்களையும் தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற் கிடையே மேட்டூர் தலைமை தபால் நிலையம் சார்பில் நடை பெற்ற அஞ்சல் வார விழாவை முன்னிட்டு பொதுமக்க ளிடையே சேமிப்பு கணக்கு, அஞ்சல் துறையின் சேவைகள் மற்றும் சேமிப்பு இன்சூரன்ஸ் திட்டங்கள் எளிதில் சென்ற டையும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேட்டூர் தலைமை தபால் நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி மேட்டூர் சதுரங்காடி, மேட்டூர் மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலகம், சின்ன பார்க், நகராட்சி அலுவலக சாலை வழியாக மீண்டும் தலைமை தபால் நிலை யத்தைச் சென்று அடைந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட தபால் நிலைய அதிகாரிகள் பணியாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.