districts

img

மேச்சேரி பேரூராட்சி சிபிஎம் வேட்பாளர் வாக்குசேகரிப்பு

சேலம், பிப்.11- மேச்சேரி பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.பழனி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சேலம் மாவட்டம், மேச்சேரி சிறப்புநிலை பேரூராட்சி 3 வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஆர்.பழனி போட்டியிடுகிறார்.  இவருக்கு ஆதரவு திரட்டி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், முன்னாள் ஒன்றிய சேர்மேன் காசி விஸ்வநாதன்,  சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமமூர்த்தி, பி.தங்கவேலு, ஒன்றிய செயலாளர் ஜி.மணிமுத்து, சிபிஐ முன்னாள் ஒன்றிய செயலாளர் கேசி.வைத்தியலிங்கம், காங்கிரஸ் ஒன்றிய நிர்வாகி மகேந்திரன், திமுக வார்டு செயலாளர் முருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.  இந்த வாக்கு சேகரிப்பில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.பழனிக்கு  அப்பகுதி மக்கள் அமோக ஆதரவு தெரிவித்தனர்.