districts

img

நில அளவையாளர்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, செப்.14- நிரந்தர வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணையை திரும் பப்பெற வேண்டும் என வலியு றுத்தி வியாழனன்று நில அளவை யாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். நில அளவைத்துறையில் கால முறை ஊதியத்தில் பணியமர்த்தப் பட்ட நிரந்தர பணியாளர்களான புல உதவியாளர் பணியிடங்களை தனியார் மூலம் அத்துக்கூலிக்கு நியமித்துக் கொள்ளலாம் என்று  தமிழ்நாடு அரசாணை பிறப்பித் துள்ளது. அனைத்து துறைகளுக் கும் தாய் துறையாக விளங்கும் நில அளவைத்துறையில், அளவைப்  பணியின் ஆதார ஊழியராக உள்ள  புல உதவியாளர்களை தனியார் ஏஜென்சி மூலம் நியமிக்கும் இந்த நடவடிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் கி.வெங்க டேசன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ரா.கல்பனா, மாவட்ட துணைத்தலைவர் ராம மூர்த்தி, மாவட்டப் பொருளாளர் மா.முருகன், அரூர் கோட்டத் தலைவர் சக்திவேல், தருமபுரி கோட்டத் தலைவர் சங்கீதா ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இதில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  மாவட்டச் செயலாளர் ஏ.சேகர்,  பொருளாளர் பி.எஸ்.இளவேனில், ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி உட்பட பலர் கலந்து  கொண்டனர். சேலம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.ராஜேந் திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் செ.முருகேசன், மாவட்டச் செயலாளர் மா.வெங் கடாசலம் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். இதில் தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் சுரேஷ், முருகப்பெருமாள்  உட்பட ஏராளமான நில அளவை யாளர்கள் கலந்து கொண்டனர்.