districts

img

பொள்ளாச்சியில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு காவல் துறையினரின் துரித நடவடிக்கைக்கு பாராட்டு

பொள்ளாச்சி, ஜூலை 4- பொள்ளாச்சி அரசு மருத்துவம னையில் கடத்தப்பட்ட பெண் குழந் தையை 22 மணி நேரத்தில் மீட்டு,  குழந்தையை உரியவர்களிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர். மேலும் பிடிபட்ட பெண்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், பொள்ளாச் சியை அடுத்த குமரன் நகரைச் சேர்ந்த யூனிஸ் - திவ்யபாரதி தம்பதியின ருக்கு  கடந்த ஜுன் 29 ஆம் தேதி யன்று பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. தொடர் கண்கா ணிப்புக்காக மருத்துவமனையில் இருந்த பிறந்து 4 நாளே ஆன பெண் குழந்தையை, ஞாயிறன்று அதி காலை 4 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி சென்றனர். இச்சம்பவத்தில் கோவை மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், மூன்று துணை கண்காணிப்பாளர் தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிசிடிவி  கேமிராக்கள் இல்லாத காரணத்தி னால் மருத்துவமனைக்கு உள்ளே யும், பொள்ளாச்சியிலிருந்து கோவை செல்லும் வழியிலும் உள்ள சுமார்  150க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமி ராக்களை போலீசார் ஆய்வு செய்த னர். அப்போது ஒரு பெண் குழந்தை யைக் கடத்திச் செல்வதும் அவரு டன் ஒரு சிறுமி இருப்பதும் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் காவல்  துறையினர் கோவை, திருப்பூர் மற் றும் பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக தேடி வந்தனர். இதில், கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த கொடுவாயூரில் வைத்து ஜெமினா (34) என்ற பெண்ணை பிடித் தனர். இவருக்கு ஏற்கனவே திரு மணமாகி மூன்று குழந்தைகள் உள்ள னர். தற்போது கணவனை பிரிந்து மணிகண்டன் என்பவருடன் வாழ்ந்து  வரும் நிலையில், மணிகண்டன் தனக் கும் வாரிசாக ஒரு குழந்தை வேண்டு மென்று கேட்டதன் பேரில் ஜெமினா தான் கர்ப்பமாக இருப்பது போல் போலியாக நடித்து வந்துள்ளார். இதனிடையே பொள்ளாச்சி வந்த  அவர் தனக்கும் குழந்தை பிறந்துள்ள தாக மணிகண்டனிடம் பொய் கூறிய தோடு, தனது மகளை அழைத்துக் கொண்டு பொள்ளாச்சி அரசு மருத்து வமனையில் திவ்யபாரதிக்கு பிறந்த  குழந்தையை கடத்தி சென்றுள்ளது தெரியவந்தது.   இதனையடுத்து சம்பந்தப்பட்ட பெண்ணை காவல் துறையினர் கைது செய்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். கடத்தப்பட்ட குழந்தையை,  திங்களன்று  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பெற்றோர்களிடம்  ஒப்படைத்தார். குழந் தையை பெற்றுக்கொண்ட பெற்றோர், உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.முன்னதாக குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் 22 மணிநேரத்திற்குள் ளாகவே பிடித்த தனிப்படை காவல் துறையினரை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர், கோவை சரக காவல் துறை தலைவர் முத்துச் சாமி, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் பாராட்டினர்.

;