districts

img

நடனமாடி வாக்குசேகரித்த கொமதேக வேட்பாளர்

நாமக்கல், ஏப்.11- கொல்லிமலையில், மலைவாழ் மக்களுடன் பாரம்பரிய நடனமாடி கொமதேக வேட்பாளர் வாக்குசேகரித்தார். நாமக்கல் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன், கொல்லிமலை, செம்மேடு உள்ளிட்ட மலை  கிராமப்பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதி பெண்களுடன் இணைந்து, மலை வாழ் மக்களின் பாரம்பரிய கும்மி ஆட்டம் ஆடி வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்வு அங்கு கூடியிருந்த  பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்தது. இதைத்தொ டர்ந்து வேட்பாளர் மாதேஸ்வரன் மலைவாழ் மக்கள் மற்றும்  கொல்லிமலையில் வாழும் பொதுமக்களை சந்தித்து தான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், கொல்லிமலைக்கு தேவையான அனைத்து விதமான அடிப் படை வசதிகள் செய்து கொடுத்து, மக்களின் தேவை அறிந்து  செயல்படுவேன் என உறுதியளித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இந்நிகழ்வில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.