இந்தியா கூட்டணி சார்பில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசன் போட்டியிடுகிறார். இந்நிலையில், தொகுதிக்குட்பட்ட அயோத்தி யாபட்டிணம் பகுதியில் தேர்தல் அலுவலகத்தை திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் திறந்து வைத்தார். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் மேவை. சண்முகராஜா, காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் வைத்திய லிங்கம், விசிக மாவட்டச் செயலாளர் தெய்வானை உட்பட பலர் கலந்து கொண்டனர்.