கோவை, டிச.28- நலவாரிய அட்டை அனைத்து ஊடகவியலாளர்களுக் கும் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை வலியுறுத்தி கோவை மாவட்ட ஊடகவியலாளர்கள் பெருந்திரளாக மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து முறையிட்டனர். ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் நலவாரிய அட்டை வழங்கப்பட வேண்டும், மூன்று வருடங்களுக்கு மேலாக மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை, இதனை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கோயம்புத் தூர் பத்திரிகையாளர் மன்றம் உள்ளிட்ட அனைத்து பத்திரி கையாளர் சங்கங்களை சேர்ந்தவர்கள் மற்றும் ஊடகவிய லாளர்கள் கோவை மாவட்ட வருவாய் அலுவலரை சந் தித்து முறையிட்டனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட் டம் வருவாய் அலுவலர் உரிய நடவடிக்கை எடுப்பதாக பத்தி ரிகையாளர்களிடம் உறுதியளித்தார். இதன் எதிரொலியாக பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் மாவட்ட நிர்வா கத்தின் அடையாள அட்டை அரசு தெரிவித்துள்ள விதிக ளுக்கு உட்பட்டு 2024 ஆம் ஆண்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஜனவரி மாத இறுதிக் குள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பத்திரிக்கையாளர்க ளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் செய்தி மற் றும் மக்கள் தகவல் தொடர்பு துறை தரப்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.