districts

img

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் மலைப்பாதை சாத்தியமா ? அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு

கோவை பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலில் மலைப்பாதை அமைக்க சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஞாயிறன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து இந்து சமய அறநிலைத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலைக்கோயில்களில் மலைப்பாதை அமைக்கும் திட்டத்தில் உள்ள திருக்கோயில்கள் இயற்கையே இறைவானக உள்ள கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில் உள்ளிட்ட ஐந்து மலைக்கோயில்களுக்கு மலைப்பாதை அமைக்கப்படும் என சட்டமன்ற கூட்டத்தின் மாநிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின்படி முதற்கட்டமாக கோவை மாவட்டம் பூண்டி வட்டம் வெள்ளியங்கிரி, அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலில் அதிக அளவில் மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா முழுவதும் உள்ள சிவனடியார்கள். பக்தர்கள் பல்வேறு வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் திருவிழா கால கட்டங்களில் தரிசனம் செய்ய கூட்டம் அதிமாக வருவதால் பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் மலைப்பாதை அமைக்க வலியுறுத்தியுள்ளனர். இதனையேற்று மலைப்பாதை அமைப்பதற்கு விரைவில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு மலைப்பாதை அமைக்கும் பணிக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ரூபாய் 1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெள்ளிங்கிரி மலையில் ஏறி அமைச்சர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன்,. கூடுதல் ஆணையர் கண்ணன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

;