districts

img

சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்திடுக ஆட்சியர் வேண்டுகோள்

தருமபுரி, அக்.29- சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து வாழ்வில் வளம் பெறுமாறு தரும புரி மாவட்ட ஆட்சியர் வேண்டு கோள் விடுத்துள்ளார்.  சிக்கனத்தின் அவசியத்தையும், சேமிப்பின் முக்கியத்து வத்தையும் வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்.30ஆம் தேதி உலக சிக்கன நாளாக கடை பிடிக்கப்பட்டு வரு கின்றது.  அதன்படி,  30ஆம் தேதியன்று  உலக சிக்கன நாளாக நாடு முழுவதும் அனு சரிக்கப்படுகிறது. சிக்க னத்தை கடைபிடிக்க  வேண்டும் எனும் பொழுது  தேவையற்ற செலவுகளை தவிர்த்தல், திட்டமிட்டுச் செல விடுதல், வீண் விரயம் செய்யாமல் இருத்தல், ஆடம்பரத்திற்கு ஆட்படாமல் இருத்தல், அத்தியாவசிய செலவுகளை மட்டும் மேற்கொள்ளுதல் மற்றும் சமூகத்  தீமைகளில் ஈடுபட்டு பொருள் அழிவிற்கு வகை செய்யாதிருத்தல் ஆகிய நல்ல பழக் கங்களை ஒவ்வொருவரும் தவறாமல் கடை பிடிக்க வேண்டும். இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு  என்பதற்கேற்ப எதிர் கால வாழ்க்கை பாதுகாப்பாகவும், இனிமை யானதாகவும் அமைந்திட, பெற்றோர்கள்  தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை  தொடர்ந்து சேமிப்பதோடு, தங்கள்  பிள்ளைகளுக்கும் சிறுவயது  முதலே சேமிப்பின் அவசியத்தை உணர்த்திடும் வகையில் சேமிக்கும் பழக்கத்தினை  ஏற்படுத்தி  சிக்கனம் என்னும்  அடித்தளத்தின் மீதே சேமிப்பு எனும் கட்டிடத்தை எழுப்ப இயலும் என் பதை உணர்த்திட வேண்டும். மக்கள் சேமிப்பின் முக்கி யத்துவத்தைக் கருத் தில் கொண்டு, சிறு சேமிப்புத் திட்டங் களில் முதலீடு செய்வ தால், அத்தொகை  தங்கள் எதிர்கால வாழ்க் கைக்கு உதவுவதுடன்,  அரசின் வளர்ச்சித் திட்டங்களைச்  செயல்படுத்துவதற்கும்,நாட்டின்  முன்னேற்றத்திற்கும் பெரிதும் பயன்படும்.  எனவே, அனைத்து தரப்பு பொது மக்களும்  தங்கள் வாழ்வில் பொருளாதாரப் பாது காப்புடன் சிறந்து விளங்கிட, அருகாமை யிலுள்ள அஞ்சலகங்களில் தங்களுக் கேற்ற சிறுசேமிப்புத் திட்டங்களில்  முதலீடு செய்து வாழ்வில் வளம் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர் விழி தெரிவித்துள்ளார். 

;