districts

img

மாமேதை மார்க்ஸ் 204ஆவது பிறந்த தினம் திருப்பூரில் உற்சாகமாக கடைப்பிடிப்பு

திருப்பூர், மே 5- மனிதகுல விடுதலைக்கு சோசலிசமே தீர்வு என்று கண்டறிந்து எடுத்துரைத்த கம்யூ னிஸ தத்துவ மூலவர் மாமேதை கார்ல்  மார்க்ஸின் 204ஆவது பிறந்த தின விழா  திருப்பூரில் உற்சாகமாகக் கடைப்பிடிக்கப் பட்டது. திருப்பூர் அவிநாசி சாலை தியாகி பழனி சாமி நிலையத்தின் முன்பாக வியாழனன்று மாமேதை மார்க்ஸ் அலங்கார அமைப்பு அழகுற வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதன் முன்பாக நடைபெற்ற மார்க்ஸ் 204 ஆவது பிறந்த தின விழாவுக்கு மார்க் சிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன் தலைமை வகித்தார். இதில் மார்க்ஸ் குறித்து கவிஞர்  கந்தர்வன் எழுதிய கவிதையை வடக்கு மாந கரச் செயலாளர் பி.ஆர்.கணேசன் வாசித் தார். இதைத் தொடர்ந்து கார்ல் மார்க்ஸ் மனி தகுலத்துக்கு வழங்கியிருக்கும் தத்துவம் மற்றும் இந்தியா குறித்து அவரது பார்வை களை விளக்கி கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ் ஆகியோர் உரையாற்றினர். இந்த  நிகழ்வில் கட்சி அணியினர் பெருந்திரளா னோர் கலந்து கொண்டனர். விழாவின் முடி வில் திருப்பூர் காலேஜ் ரோடு கிளை சார் பில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட் டது. வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால் நன்றி கூறினார்.