districts

img

சாமளாபுரம் மக்களுக்கு நீதி கோரி மார்க்சிஸ்ட் கட்சி பெருந்திரள் முறையீடு

மக்களை போராடத் தூண்டும் அரசு - பி.ஆர்.நடராஜன்

மக்கள் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டு அமைதியாக இருந்தாலும் அவர்களைப் போராடுவதற்கு மாவட்ட நிர்வாகம் தூண்டுகிறது என்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் எம்.பி. குற்றஞ்சாட்டினார். மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை என்பது போல மக்கள் சும்மா இருந்தாலும், அவர்கள் குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்து அவர்களை போராட்டத்துக்கு தூண்டி விட்டுள்ளனர். அருந்ததியர் மக்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி போராடுவது என்பது, அவர்கள் 96 சதவிகிதம் பேர் நிலமற்றவர் கள், முழுவதும் பாட்டாளிகள். பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பகுதியாக இந்த மக்கள் இருக்கின்றனர். எனவே, இவர்களோடு மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக நின்று போரா டும், என்றார்.  அருந்ததியர் மக்களுக்கு 3 சதவிகித உள் இட ஒதுக்கீடு பெற்றுத் தர முயற்சி மேற்கொண்டது மார்க்சிஸ்ட் கட்சி, அப்போ தைய மாநிலச் செயலாளர் என்.வரதரா ஜன். அன்றைய திமுக அரசின் முதல்வர் கலைஞர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இட ஒதுக்கீடு பெற்று மருத்துவக் கல்லூரி யில் இடம் பெற்ற அந்த மாணவர்கள் லட்சக் கணக்கில் பணம் கட்ட முடியாமல் இட ஒதுக் கீட்டின் பலனை பெற முடியாமல் இருந்தது.  அப்போது, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நானும், எங்கள் கட்சியினரும் நாடாளு மன்றத்தில் எம்.பி.க்களிடம் கையெழுத்துப் பெற்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து அரசாணை 91 என்று புதிய அரசாணை பிறப்பிக்கச் செய்தோம். அதன் படி எந்த கல்லூரியிலும் அருந்ததியர் மாண வர்களுக்கு கல்விக் கட்டணம் கேட்டு அவர்களுக்கு இடமில்லை என்று சொல்லக் கூடாது, அவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என்ற நிலையை ஏற் படுத்தினோம் என்று பி.ஆர்.நடராஜன் கூறி னார்.

நீதிமன்றத்தை ஏமாற்றுவதா?

சாமளாபுரம் மக்கள் வீட்டுமனை பிரச் சனையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில்  பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் பேசுகையில், அரசு அதிகாரிகள் நீர்நிலைப் புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்றுவதாக சொல்லி பார பட்சமாக செயல்படுகின்றனர். நீதிமன் றத்தை ஏமாற்றுகின்றனர் என்று கூறினார். சாமளாபுரம் போல திருப்பூரிலும் வேறு சில  பகுதிகளில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள் ளது. குறிப்பாக அங்கேரிபாளையம் பகுதி யில் நீர்நிலைக்கு அருகாமையில் உள்ள சாய ஆலையை விட்டு விட்டு, அதைத் தாண்டி நீர் நிலையில் இருந்து தள்ளி இருக் கக்கூடிய குடியிருப்பு மக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ச.பெரியபாளையம் குளம் அருகே தனியார் பள்ளி அந்த குளத் துக்கு அருகில் உள்ள இடத்தை ஆக்கிர மித்து வைத்துக் கொள்ள நிர்வாகம் உடந் தையாக செயல்பட்டுள்ளது என்றும் குற்றஞ் சாட்டினார்.

திருப்பூர், மார்ச் 18- சாமளாபுரம் மக்களை ஏரி புறம்போக்கு நிலத்தில் உள்ளனர் என வெளியேற நோட்டீஸ் வழங்கியிருப்பதை திரும்பப் பெறக் கோரியும், நூறாண்டுகளுக்கு மேலாக வசிக்கும் அப்பகுதி மக்களுக்கு வகை மாற்றம் செய்து வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தியும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளி யன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு பெருந்திரள் முறையீட்டு போராட் டம் நடைபெற்றது.  கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்தில், கட்சியின் மாநிலக் குழு உறுப் பினர் கே.காமராஜ், பல்லடம் ஒன்றிய செயலா ளர் ஆர்.பரமசிவம், தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாநில துணைப் பொதுச் செயலா ளர் யூ.கே.சிவஞானம், மாவட்ட செயலாளர் ச.நந்தகோபால், ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை நிறுவன தலைவர் அ.சு.பவுத்தன் உட் பட சாமளபுரம் அருந்ததியர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது என்று மக்கள் முடிவு செய்தனர். ஆனால் ஆட்சியர் இல்லாத நிலை யில் ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே அவர்கள் காத்திருந்தனர். மாலை 4 மணியள வில் ஆட்சியர் வினீத் வந்தபிறகு அவரை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் உள்பட பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநி திகள் சந்தித்து பேசினர். அப்போது, தமிழக அரசு நீர்நிலை ஆக்கிர மிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க சொல் லியிருக்கும் நிலையில் நோட்டீஸ் வழங்கி யிருப்பதாக ஆட்சியர் வினீத் கூறினார். எனி னும் நீர்நிலை புறம்போக்கு என்று சொல்லப் பட்டாலும், இந்த மக்கள் கடந்த நூறு ஆண்டு களாக வசிக்கும் இப்பகுதியில் எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை, நீர் நிலைக்கும் பாதிப்பு இல்லை. எனவே இந்த இடத்தை நேரில் பார்வையிட வேண்டும். அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு வசிக்கும் மக்களின் வாழ்வா தாரம் சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை மையப்படுத்தியே இருப்பதால் இங்கிருந்து மக்களை அப்புறப்படுத்தக் கூடாது என்று பி.ஆர்.நடராஜன் எம்.பி., ஆட்சி யரிடம் வலியுறுத்தினார். இதுதொடர்பாக பதிலளித்த ஆட்சியர், கூடு தலாக 10 நாட்களுக்கு கால அவகாசம் தருவ தாக கூறினார். எனினும் அரசிடம் தெரிவித்து நல்ல முடிவு காண வேண்டும் என்று சாமளா புரம் மக்கள் சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தினர்.