districts

img

மானிய கோரிக்கையில் ஏமாற்றம்: போக்குவரத்து ஊழியர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மார்ச் 30 - தமிழக அரசின் போக்குவரத்து மானிய கோரிக்கையில்  தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளதை கண்டித்து  அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தினர் அரசுப் பேருந்து பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தொழிலாளர்களுக்கு ஒப்பந்த நிலுவை, அகவிலைப்படி  நிலுவை, கொரோனா காலத்தில் பணி செய்தவர்களுக்கு  சிறப்பு ஊதியம், 2022 மே முதல் ஓய்வு பெற்றோர் பணப்பலன்,  ஓய்வு பெற்றோர் அகவிலைப்படி உயர்வு, ஓய்வு பெற்றோ ருக்கான மருத்துவ காப்பீடு வழங்குவது உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கேயம் அரசுப் போக்குவ ரத்துக் கிளை முன்பாக சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  சிஐடியு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க நிர் வாகி வின்சென்ட் தலைமை ஏற்க, கிளைச் செயலாளர் அசோக் குமார், பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர், சிஐடியு மாவட் டக்குழு உறுப்பினர் திருவேங்கடசாமி உள்ளிட்டோர் பங் கேற்று உறையாற்றினர். கிளைப்பொருளாளர் காளிராஜ்  நன்றி கூறினார். உடுமலை உடுமலை போக்குவரத்து அலுவலகத்தின் முன்பு நடை பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு அரசுப்  போக்குவரத்து ஊழியர்கள் சங்க கிளை தலைவர் பாபு  தலைமை ஏற்றார். மண்டல துணை பொதுச்செயலாளர் விஸ் வநாதன், கிளை துணைச் செயலாளர் ஜோதி கண்ணன்  மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  திருப்பூரில் காங்கேயம் சாலை அரசுப் போக்குவரத்துப் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மண்டலப்  பொதுச் செயலாளர் பி.செல்லதுரை உள்ளிட்ட திரளான தொழிலாளர்கள்  கலந்து கொண்டு கண்டன முழக்கம் எழுப்பி னர்.

;