districts

img

கணசக்தி முன்னாள் ஆசிரியர் தோழர் அவிக் தத்தா காலமானார்

சென்னை,டிச.14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வங்க மொழி நாளிதழான கண சக்தியின் முன்னாள் ஆசிரியர் அவிக் தத்தா  கொல்கத்தாவில் காலமானார். அவருக்கு வயது 58. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் செவ்வாயன்று (ஜன.14) காலை சிகிச்சை பலனின்றி காலமானார். சிறந்த பத்திரிகையாளராகத் திகழ்ந்த அவர் கட்சியின் மேற்கு வங்க மாநில செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். இந்திய மாணவர் சங்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவராகவும் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் போது கல்வியில் சிறந்த விளங்கி தங்கப்பதக்கம் பெற்றவர். கட்சியிலும் பத்திரிகையிலும் சிறப்பாகச் செயல்பட்ட அவிக் தத்தா கணசக்தி நாளிதழில் நவீன காலத்திற்கு ஏற்ப வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் மாற்றங்களைக் கொண்டுவந்தவர். மாற்று ஊடகவியல், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றிலும் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்கு வங்க மாநிலத்தில் இடது முன்னணிக்குப் பின்னடைவு ஏற்பட்டபோது மிகவும் கடினமான காலகட்டத்தில் அவரது வழிகாட்டுதலில் கனசக்தி சிறப்பாகச் செயல்பட்டது. கிழக்கு இந்தியாவில் மின்னணு ஊடகத்தின் முன்னோடிகளில் இவரும் ஒருவர். கடமை உணர்வுடனும் கட்சி பிடிப்புடனும் இறுதிவரை செயல்பட்டவர். அவரது மறைவு கணசக்தி நாளிதழுக்கும் வங்க ஊடக உலகிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பேரிழப்பாகும்.  யெச்சூரி அஞ்சலி கொல்கத்தாவில் வைக்கப்பட்டிருந்த தோழர் அவிக் தத்தா உடலுக்கு சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இடது முன்னணி அமைப்பாளர் பிமன்பாசு, மாநிலச் செயலாளர் சூரிய காந்த மிஸ்ரா, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள், கணசக்தி ஆசிரியர் குழுவினர், ஊழியர்கள் , பத்திரிகையாளர்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

;