கோவை, பிப். 11- கோவை மாவட்டத்தில், நான்கு ஆண்டுக ளில் 57,241 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3505.87 கோடி வங்கி கடன் வழங்கப் பட்டுள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கோவை மாநகராட்சி யில், 5356 மகளிர் சுயஉதவிக்குழுக்களும், நக ராட்சி பகுதிகளில் 1248 மகளிர் சுயஉதவிக் குழுக்களும், பேரூராட்சி பகுதிகளில் 2034 மக ளிர் சுயஉதவிக்குழுக்களும், ஊராட்சி ஒன் றிய பகுதிகளில் 7700 மகளிர் சுயஉதவிக் குழுக்களும், என மாவட்டத்தில், 16,338 மக ளிர் சுயஉதவிக்குழுக்கள் செயல்பட்டு வரு கின்றன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டில் 13171 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.769.53 கோடி, வங்கி கடன் இணைப்பும், 2022-2023 ஆம் ஆண் டில் 13181 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.856.53 கோடி வங்கி கடன் இணைப்பும், 2023-24- ஆம் ஆண்டில் 15324 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.923 கோடி வங்கி கடன் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. தற் போது 2024-25 -ஆம் ஆண்டிற்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்க ரூ.1229 கோடி இலக்கீடு நிர்ணயம் செய்யப் பட்டு, அதில் தற்போதுவரையில், ரூ.956.81 கோடி வங்கிக் கடன் இணைப்பு 15,565 மக ளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 57,241 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ. 3505.87 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள் ளது. இதுகுறித்து, எஸ்எஸ்குளம் வட்டாரத் தில் உள்ள, சாமநாயக்கன்பாளையம் பகுதி யைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பி னர்கள் கூறுகையில், கோவை மாவட்டம் சாமநாயக்கன்பாளையத்தில், 13 பெண்க ளும் இணைந்து ஶ்ரீ வெங்கிடாச்சலபதி மகளிர் சுய உதவிக்குழுவை ஆரம்பித்தோம். இங் குள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் வங்கிக் கணக்கு துவங்கினோம். முதல் கடனாக ரூ.1.00 இலட்சம் ஊராட்சி அளவிலான கூட் டமைப்பு பெற்று தந்தது. இத்தொகையினை முதலீடாக கொண்டு ஆடைகள் தைத்து விற் பனை செய்து வந்தோம். பின்னர், கூட்ட மைப்பு வழங்கிடும் சமுதாய முதலீட்டு நிதி யிலிருந்து ரூ- 70 ஆயிரம் கடனாக பெற்று இரண்டு பவர் மெஷின்களை வாங்கி, மொத்த மாக துணி எடுத்து தைக்க ஆரம்பித்தோம். சந்தை மற்றும் அனைத்து கூட்டங்களுக் கும் எங்கள் தயாரிப்புகளை கொண்டு சென் றோம். நல்ல வரவேற்பும் கிடைத்தது. தற்போது மாதம் தோறும் 500-க்கும் மேற் பட்ட ஆடைகள் விற்பனை செய்து வருகி றோம். மேலும் எங்களது குழுவிற்கு ரூ.5 லட் சம் கடனாக பெற்றோம். தற்போழுது 4 பவர் மெஷின்களுடன் பலருக்கு வருமான மும் வாழ்வும் தந்த நிறுவனம் போல நடத்தி வருகிறோம். பலருக்கு பயன்படும் வகையி லும் என்போன்ற மகளிர் சொந்த காலில் நின்று வெற்றி அடைய அரசின் இத்திட்டம் பெரிதும் பயன்படுவதாக தெரிவித்தனர்.