தருமபுரி, ஆக.30- வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் போராட் டத்தில் ஈடுபட்டனர். காலை சிற்றுண்டி திட்டத்தை தனியா ருக்கு தாரைவார்ப்பதை நிறுத்திவிட்டு, சத்து ணவு மைய ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண் டும். சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியராக்கி, வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர் மற்றும் சமையல் உதவியாள ருக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியருக்கு குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத் தினர் மடியேந்தும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தேவகி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் அனுசுயா, வளர்மதி, ராமன், மஞ்சுளா, ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட் டத் தலைவர் சி.காவேரி, மாவட்டப் பொருளா ளர் பி.வளர்மதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் கோ.பழனியம் மாள், மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங் கத்தின் மாநிலச் செயலாளர் மகேஸ்வரி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் அமராவதி, மாவட்ட அமைப்பா ளர் என்.மணிச்செல்வம் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர். இதில் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் பி.சுரேஷ், மாவட்டத் தலைவர் எம்.திரை யரங்கன், சி.முருகபெருமாள், சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி கே.தங்கவேலன், கே. ராஜவேலு உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கோவை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மடியேந்தும் போராட்டத் திற்கு, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே.என்.ராமசாமி தலைமை ஏற்றார். முன்னாள் மாநிலத் தலைவர் கே.பழனிசாமி போராட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் என்.பழனிசாமி, மாநில துணைப் பொதுச்செயலாளர் எம்.சீனிவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வருவாய்த்துறை ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் வி.செந்தில் குமார், அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநில பொதுச்செயலாளர் ஏ.மலர்விழி நிறைவுரையாற்றினர். மாவட்டப் பொருளாளர் ப.சுதா நன்றி கூறினார். இதில், திரளான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.