districts

img

வன உயிரினங்களுக்கு உணவு வழங்கல்

நாமக்கல், ஏப்.7- திருச்செங்கோடு அர்த்தநாரீஸ் வரர் மலைக்கோவிலில் உள்ள வன  உயிரினங்களுக்கு, தன்னார்வலர் கள் குடிநீர், உணவு வழங்கி வருகின் றனர். கோடைகால வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதேபோல், வனப்பகுதியில் உள்ள  விலங்குகளுக்கு குடிநீரின் தேவை மற்றும் உணவுகளின் தேவை அதிக ரித்துக் கொண்டுதான் உள்ளது. இந் நிலையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் செயல்பட்டு வரும் நம்ம திருச்செங்கோடு அறக் கட்டளை உறுப்பினர்கள், இதனை  கருத்தில் கொண்டு திருச்செங் கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோ விலில் உள்ள உயிரினங்களுக்கு கடந்த 40 நாட்களாக குடிநீர் தேவை மற்றும் தங்களால் முடிந்த உணவுத் தேவையினை பூர்த்தி செய்து வரு கின்றனர். கோடை வெயில் சுட்டெரிக் கும் அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவி லில் சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்க ளில் சிமெண்ட் தொட்டிகளை அமைத்து, இருசக்கர வாகனங்க ளில் குழுவாக மலையின் கீழ் புறத்தி லிருந்தும், மேல் பகுதியில் இருந்தும்  கேன்களில் தண்ணீர் கொண்டு வந்து  தொட்டிகளில் நிரப்புகின்றனர். மலை யில் உள்ள குரங்குகள் மற்றும்  பறவை இனங்களுக்கு இது மிக வும் பயனுள்ளதாக அமைகிறது. மேலும், வாரத்தில் மூன்று முறை வாழைப்பழங்களை உணவாக அளித்து வருகின்றனர். மேலும், கோடை காலம் முடியும் வரை இந்த  உதவிகளை செய்து கொண்டே இருப்போம் என அறக்கட்டளை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.